Home தமிழ்நாடு தேனி ; மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்திட விண்ணப்பங்கள் வரவேற்பு- ...

தேனி ; மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்திட விண்ணப்பங்கள் வரவேற்பு- மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

0
SHARE

தேனி மாவட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்திட வருகின்ற 30.03.2021 மற்றும் 31.03.2021 ஆகிய தினங்களில் முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தற்போது கொரோனா தொற்றின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் நேரில் வருவதைத் தவிர்த்து ஏற்கனவே இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டும் தங்களது விண்ணப்பம் பேருந்து பயண அட்டை அசல் பணிபுரிவதற்கான சான்று மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல் வாக்காளர் அட்டை நகல் மற்றும் 4 புகைப்படங்களுடன் தபால் மூலமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் தேனி என்ற முகவரிக்கு 29.03.2021-க்குள் அனுப்பி வைத்திட வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் புதிதாக இலவச பேருந்து பயண அட்டை கோரும் நபர்கள் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்திய பின்பு விண்ணப்பித்திடலாம். மேலும் விபரங்களுக்கு 04546-252085 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here