Home அரசியல் காங்கிரஸ் ஓட்டுக்காக எது வேண்டுமானாலும் செய்யும் ; பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் ஓட்டுக்காக எது வேண்டுமானாலும் செய்யும் ; பிரதமர் மோடி தாக்கு

0
SHARE

லகிம்பூர், மார்ச்-24

அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஓட்டுக்காக எது வேண்டுமானாலும் செய்யும், யாருடன் வேண்டுமானாலும் சேரும், யாருக்கும் துரோகம் செய்யும் என கடுமையாக சாடினார்.

அசாம் மாநிலம் லகிம்பூர் மாவட்டம் பிஹ்புரியா பகுதியில் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது;

காங்கிரஸ் உடையது மகா கூட்டணி கிடையாது. மகா பொய்யர்கள் அணி. பல ஆண்டுகளாக காங்கிரஸ் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை. 15 ஆண்டுகளில், தேயிலை தொழிலாளர்களின் ஊதியத்தை 100 ரூபாய் கூட அவர்களால் உயர்த்த முடியவில்லை. லகிம்பூர் சிகப்பு அரிசிக்கு புகழ் பெற்றது. தன்னிறைவு இந்தியா திட்டம் மூலம் இந்த அரிசியை உலகளவிற்கு கொண்டு செல்லும் வேலைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

70 ஆண்டுகளில் அசாமில் 13 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் தான் அமைக்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் நாங்களில் 15 கி.மீ., கிராமப்புற சாலைகள் அமைத்துள்ளோம். லகிம்பூரில் மட்டும் 700 கி.மீ.,க்கு புதிய சாலைகள் அமைத்துள்ளோம். அசாமின் அடையாளத்தை அழிக்கத் தயாராக உள்ளவர்களுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. இங்கு இடதுசாரிகளுடன் கூட்டு சேர்ந்துள்ள காங்கிரஸ், கேரளாவில் அவர்களை திட்டுகிறது.

காங்கிரஸ் ஓட்டுக்காக யாருடனும் கூட்டு சேரும், யாருக்கும் துரோகம் செய்யும். அவர்களின் ஒரே குறிக்கோள் அசாமின் அடையாளத்தை அழிப்பது தான். இது போன்ற கூட்டணியால் ஊடுருவல், ஊழல், கொள்ளைக்கு மட்டுமே உத்தரவாதம் தர முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here