Home தமிழ்நாடு மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் நில அதிர்வுடன் பயங்கர சத்தம்: அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்: வட்டாட்சியர் விளக்கம்

மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் நில அதிர்வுடன் பயங்கர சத்தம்: அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்: வட்டாட்சியர் விளக்கம்

0
SHARE

மயிலாடுதுறை, மார்ச்.27:

மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டத்திற்கு ராணுவ பயிற்சி விமானம்தான் காரணம் என்று வட்டாச்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Coming Soon
உங்கள் வாக்கு யாருக்கு?

மயிலாடுதுறை சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த பயங்கர சத்தம் கேட்பதற்கு முன்பு விமானம் ஒன்று சென்றுள்ளதுன். அடுத்த
சிலமணித்துளிகளில் கேட்ட இந்த சத்தம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. மக்கள் அனைவரும் வீடுகள் அதிர்ந்ததை எண்ணி மிகவும் அச்சத்தில் உறைந்தனர். மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதாகவும் மக்கள் மத்தியில் புரளி கிளம்பியது. இந்நிலையில், வட்டாட்சியர் விளக்கம் அளித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளார்.

பயங்கர சத்தம் கேட்டதாக வந்த புகாரினை அடுத்து, கோவாங்குடியில் நேரில் ஆய்வு செய்த வட்டாட்சியர் பிரான்சுவா கூறியதாவது,

இந்த வெடிசத்தம் ஏற்பட ராணுவ விமானம்தான் காரணம். அந்த நேரத்தில் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை. ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது உண்டானதே இந்த பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வு. எனவே மக்களுக்கு அச்சம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பயங்கர சத்தம் கேட்பதற்கு சிலமணித்துளிகள் முன்பு விமானம் ஒன்று சென்றுள்ளது. பின்பு கேட்ட இந்த சத்தம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. மக்கள் அனைவரும் வீடுகள் அதிர்ந்ததை எண்ணி மிகவும் அச்சத்தில் உறைந்தனர். மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதாகவும் மக்கள் மத்தியில் புரளி கிளம்பியது. இந்நிலையில், வட்டாட்சியர் விளக்கம் அளித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here