Home தமிழ்நாடு தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான இறுதிகட்ட பயிற்சி வகுப்பு

தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கான இறுதிகட்ட பயிற்சி வகுப்பு

0
SHARE

தருமபுரி, ஏப்.04

தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் வாக்கு பதிவு மையங்களில் ஏப்ரல் 6-ல் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவருமான கார்த்திகா தலைமையில்  தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆர்.கே.தினேஷ் சிங் கமால் ஜஹான் லக்ரா சக்கிராலா சாம்பசிவராவ் (காவல் பார்வையாளர்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற  உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கார்த்திகா தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆர்.கே.தினேஷ் சிங் , (தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி), கமால் ஜஹான் லக்ரா , (பாலக்கோடு,பென்னாகரம்), பங்கஜ் , (அரூர்), சக்கிராலா சாம்பசிவராவ் (காவல் பார்வையாளர்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கார்த்திகா பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, பென்னாகரம், அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி, மற்றும் தருமபுரி ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி 870 மையங்களில் 1817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை அலுவலர்,வாக்குச்சாவடி அலுவலர்- நிலை 1, வாக்குச்சாவடி அலுவலர் -நிலை 2, வாக்குச்சாவடி அலுவலர் – நிலை 3 ஆகிய நிலைகளில் நான்கு பேர் வீதம் 7268 பணியாளர்கள் வாக்குப்பதிவின் தேர்தல் பணி மேற்கொள்ள பணியமர்த்தப்பட உள்ளனர்.

20ம% கூடுதல் பணியாளர்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் பதற்றமான மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 149 நுண் பார்வையாளர்கள் பணியாற்றஉள்ளனர்.அதுமட்டுமன்றி 20மூ நுண் பார்வையாளர்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பதிவு செய்யப்படும் கொரொனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு பேர் வீதம் மொத்தம் 3634 நபர்கள் பணியமர்த்தபட உள்ளனர்.  மேலும் 10மூ கூடுதல் பணியாளர்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 146 மருத்துவ அலுவளர்கள், 146 சுகாதார ஆய்வளர்கள் என 500க்கு மேற்பட்ட மருத்துவ அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் பணிபுரிய  கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 25 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 23 இதர வாகனங்கள் என 48 வாகனங்கள் மருத்துவ பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளது. அனைத்து வாக்குச்சவடிகளுக்கும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது வாக்களர்களுக்கு எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்ய அனைத்து முன்னேற்பாடு  நடவடிக்கை மேற்கௌ;ளப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான எஸ்.பி. கார்த்திகா பேசினார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கே.ராமமூர்த்தி, தருமபுரி சார் ஆட்சியர் மு.பிரதாப் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திரு.தணிகாச்சலம்(பென்னாகரம்),முத்தையன்(அரூர்), சாந்தி (பாலக்கோடு), நாசீர் இக்பால் (பாப்பிரெட்டிப்பட்டி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் நரேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here