

நாகை, ஏப்.04:
நாகை மாவட்டம், வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
அதன்படி, நாகை மாவட்டம், வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி, வீரமணியின் மாமனார் பாப்பையன், ரஞ்சித், முருகையன், கிளை செயலர்கள் ராமலிங்கம், சேகர் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனையானை நடைபெற்று வருகிறது.