Home தமிழ்நாடு திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் இறுதி பிரச்சாரம்

திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் இறுதி பிரச்சாரம்

0
SHARE

திருப்பூர், ஏப்.04:

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அண்ணா தி.மு.க.,வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., கொங்குநாகர் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றபோது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஜெ.ஆர்.ஜான், கொங்கு நகர் பகுதி செயலாளர் சி.கணேஷ், கோல்டன் நகர் பகுதி செயலாளர் எம்.ஹரிஹரசுதான், 24 வது வார்டு செயலாளர் அர்ஜுனன், ரவிக்குமார் (த.மா.கா), அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்க நிறுவத் தலைவர் ஜி.சுப்பிரமணி என்ற ஜி.கே.விவசாயமணி, தலைமை ஆலோசகர் எஸ்.சென்னியப்பன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here