Home தமிழ்நாடு திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் விசாலாட்சி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வீடு, வீடாக சென்று குக்கர்...

திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் விசாலாட்சி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வீடு, வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

0
SHARE

திருப்பூர், ஏப்.04:

திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் அ .விசாலாட்சி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வீடு, வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு தீவிர வாக்குகள் சேகரித்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் அ விசாலாட்சி பல்லடம் ரோட்டில் உள்ள பூம்புகார் நகர், முத்தையன் கோவில், பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பூ மார்க்கெட்டில் ‘பூ கட்டும் பெண்களுடன் சேர்ந்து அவரும் பூ கட்டி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்குபவர்கள் பத்திரிக்கையாளர்கள். ஜனநாயகம் கேள்விக்குறியானால், பத்திரிக்கையாளர்களின் நிலையும் கேள்விக்குறியாகவே மாறும். அது போல் திருப்பூரில் உள்ள பத்திரிகையாளர்களின் நிலைமையும் உள்ளது. சமூக பிரச்சனைகளை அன்றாடம் நமக்கு பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தும் அவர்களின் கோரிக்கைகள் இதுநாள் வரை நிறைவேற்றப்படாவிலை அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தனி கவனம் எடுத்து டிடிவி தினகரன் தலைமையில் அமையும் அரசில் திருப்பூரில் பத்திரிக்கையாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

பனிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிக்கையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும். பத்திரிக்கையாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படும் போது உடன் அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் களையப்படும். ஊதியம், மருத்துவ காப்பீடு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட ஊடகத் துறையினரின் நலன்களைப் பாதுகாக்க ஊடக நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறினார். பின்னர் அவர் ஜம்மனை பள்ளம், காமாட்சியம்மன் வீதி, தெக்கு தோட்டம், புத்தோட்டம், ஷரீப் காலனி உள்ள பகுதிகளில் பிரச்சரத்தில் ஈடுபட்டார்.

வேட்பாளருடன் மாவட்ட துணைச் செயலாளர் புல்லட் ரவி, மாநில இளைஞர் பாசறை துணைத்தலைவர் ஏ.கே. சாமிநாதன், பகுதிகழக செயலாளர்கள் ஏ.பி.டி.சரவணன், ஜெகதீஸ், கேஸ் சக்தி, சிவக்குமார், சிறுபான்மை பிரிவு தலைவர் அபுபக்கர் சித்திக், சிறுபான்மை இணை செயலாளர் ஜோஸ்வ தண்டபாணி, மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வராணி, ஐ.டி.வி. இணைச்செயலாளர் கார்த்தி, உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, மருது சேனை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here