Home பொழுதுபோக்கு கர்ணன் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்

கர்ணன் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்

0
SHARE

தனுஷ் நடித்த கர்ணன் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்துள்ளார் . கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இசை – சந்தோஷ் நாராயணன். இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது. கடந்த டிசம்பர் மாதம் கர்ணன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. சந்தோஷ் நாராயணனின் பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் கர்ணன் படம் திரையரங்குகளில் ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது. தமிழகத்தில் koரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் கர்ணன் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று வெளியான கர்ணன் பட விளம்பரத்தில் வெளியீட்டுத் தேதியில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. நாளை மாலை 7.10 முதல் திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்ணன் படம் ஏப்ரல் 9 அன்று திட்டமிட்டபடி வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here