Home தமிழ்நாடு காரைக்கால் காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரி மீது இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் புகார்

காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரி மீது இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் புகார்

0
SHARE

காரைக்கால், ஏப்.09:

காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரியான அர்ஜுன் சர்மா தேர்தலின் போது நடந்த தேடுதல் வேட்டைகள் எத்தனை, வருமான வரித் துறையின் சோதனைகள் எத்தனை, பிடிப்பட்ட தங்க நாணயங்கள் எத்தனை, பணம் எவ்வளவு போன்ற தகவல்களை ஊடகங்களுக்கும், வாக்காளர்களுக்கும் தானே முன் வந்து வெளிப்படைத் தன்மையோடு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவில்லை என்றும், பிடிப்பட்ட மதிப்புயர்ந்த சொத்துக்களில் சிலவற்றை சில அதிகாரிகள் கையாடல் செய்திருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மத்திய தேர்தல் ஆணையத்திடமும், மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநரிடமும் புகார் அளித்துள்ளது.

கருப்புப் பணம் விநியோகம் மற்றும் அதுபோல பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்களை மூடி மறைக்கும் உள்நோக்கம் என்னவென்றும், அந்த புகாரில் அந்த இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.  மேலும், கடந்த 26.02.2021 அன்று மத்திய தேர்தல் ஆணையம் நன்னடத்தை விதிகளை அமலாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தாமதமாகாமல் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை மதிக்க வேண்டிய மாவட்ட தேர்தல் அதிகாரியான அர்ஜுன் சர்மா அவர்கள், வேலியே பயிரை மேயும் விதமாக அவர் பெற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இன்றுவரை தாமதப்படுத்தி ஒரு சில கூட்டணிக் கட்சியைச் சார்ந்த வேட்பாளருக்கும், அரசு ஊழியருக்கும் மறைமுகமாக ஆதரவு அளித்து, மறுபுறம் தேர்தல் ஊழல் குறித்து தகவல் அளித்தவர்கள் அந்த ஆணையத்தின் மீது வைத்திருக்கும் நன்நம்பிக்கைக்கு துரோகம் விளைவிக்கும் விதமாக அவர் செயல்படுவதாகவும், புகார் ஒன்றை இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஆணையத்திற்கும், அரசுக்கும் மற்றும் ஆளுநருக்கும் கொடுத்துள்ளது. விரைவில் வாக்காளர்களைத் திரட்டி மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் ஊழல்களையும், அலட்சியத்தையும் எதிர்த்து மக்களிடம் நீதி கேட்டு போராட்டம் நடத்தும் என்றும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here