சென்னை:
சென்னையில் இன்று (நவம்பர் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,200 என விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1,200 சரிவை சந்தித்துள்ளது.
சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கத்தால் தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு தொடர்ந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 15) தங்கம் கிராமுக்கு ரூ.11,550 மற்றும் சவரனுக்கு ரூ.92,400 என விலை நிர்ணயிக்கப்பட்டது. அன்றைய தினம் வெள்ளி கிராம் ரூ.175க்கு விற்கப்பட்டது. ஞாயிறு சந்தை விடுமுறை காரணமாக அன்றைய விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.
நேற்று (நவம்பர் 17) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.11,540 ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.92,320 ஆகவும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.173 ஆனது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் சரிந்து, கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.11,400 ஆனது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசியாக இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு மொத்தம் ரூ.1,200 சரிவு கண்டுள்ளது.

