Home » திருப்பரங்குன்றம் மலையின்மேல் நவம்பர் 30-ஆம் தேதி கார்த்திகை தீபம்: ஹிந்து முன்னணி அழைப்பு

திருப்பரங்குன்றம் மலையின்மேல் நவம்பர் 30-ஆம் தேதி கார்த்திகை தீபம்: ஹிந்து முன்னணி அழைப்பு

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வரும் நவம்பர் 30ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள தீபத்தூணில், சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டு வந்தது. மலை உச்சியில் தீபம் ஏற்றும் இந்த மரபு காலங்காலமாக இருந்து வந்தாலும், இரண்டாம் உலகப் போரின் போது பாதுகாப்பு காரணங்களால் ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது.

அதனைத் தொடர்ந்து, கோவில் முன்புறம் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நடைமுறை தொடங்கியது. இந்த நடைமுறை இதுவரை மாற்றப்படவில்லை. மலை உச்சியில் உள்ள அசல் தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும் என ஹிந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி, பல முறை ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வந்தது.

நீதிமன்ற உத்தரவின்படி, வரும் நவம்பர் 30ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த நிகழ்வில் பொதுமக்களும் கலந்து கொள்ள ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *