Home » **“பழைய வாகனங்களுக்கான தகுதி சான்று கட்டணம் உயர்வு: மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு”**

**“பழைய வாகனங்களுக்கான தகுதி சான்று கட்டணம் உயர்வு: மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு”**

சென்னை: 20 ஆண்டுக்கு பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் வெளியேறும் மாசுக்களை கட்டுப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இவை தற்போது அமலில் உள்ளன.

வயதைப் பொறுத்து கட்டணம்:

ஒவ்வொரு வாகனத்துக்கும் அதன் வயதைப் பொறுத்து தகுதி சான்றிதழ் கட்டணம் வசூலிக்கப்படும். வாகனங்கள் 3 பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன:

  • 10–15 ஆண்டுகள் பழைய வாகனங்கள்

  • 15–20 ஆண்டுகள் பழைய வாகனங்கள்

  • 20 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பழைய வாகனங்கள்

இந்த மாற்றம் 2, 3, 4 சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு பொருந்தும். குறிப்பாக, கனரக வாகனங்களுக்கான தகுதி சான்று கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, 15 ஆண்டுக்கு மேல் பழைய வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 10 ஆண்டுக்கு மேல் பழைய வாகனங்களுக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுக்கு மேல் பழைய வாகனங்கள்:

  • கனரக லாரிகள் மற்றும் பேருந்துகள்: ரூ.3,500 → ரூ.25,000

  • நடுத்தர வணிக வாகனங்கள்: ரூ.1,800 → ரூ.20,000

  • வணிக பயன்பாட்டில் உள்ள கார்கள்: ரூ.10,000 → ரூ.15,000

  • ஆட்டோ போன்ற 3 சக்கர வாகனங்கள்: ரூ.7,000

20 ஆண்டுக்கு மேல் பழைய தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள்:

  • 2 சக்கர வாகனங்கள்: ரூ.1,000

  • 3 சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்: ரூ.2,000

15–20 ஆண்டுகள் பழைய தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள்:

  • 2 சக்கர வாகனங்கள்: ரூ.500

  • 3 சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்: ரூ.1,000

10–15 ஆண்டுகள் பழைய வாகனங்கள்:

  • 2 சக்கர வாகனங்கள்: ரூ.400

  • 3 சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்: ரூ.1,000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *