லண்டன்:
இங்கிலாந்தில் 2021 ஆம் ஆண்டு பஸ்ஸார்ட்-குவாஷி என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அடுத்த நாளே அவர் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்டபோது பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டி, அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்காக, கைது செய்யப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நார்தாம்ப்டன்ஷயர் போலீசாரை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் அந்த வீடியோவை சமர்ப்பிக்காததால், நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக போலீசார் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இதன் பேரில், நார்தாம்ப்டன்ஷயர் போலீசாருக்கு சுமார் ₹58 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த அலட்சியத்திற்கு நார்தாம்ப்டன்ஷயர் போலீஸ் துறையின் தலைமை காவலர் இவான் பால்ஹாட்செட் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

