புதுச்சேரி:
எஸ்ஐஆர் படிவம் (வாக்காளர் பட்டியல் திருத்தப் பதிவு) என்ற பெயரில் இணைய குற்றவாளிகள் பொதுமக்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு OTP கேட்டால் வழங்க வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி முழுவும் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி சிலர்,
“படிவம் நிரப்புவதற்காக அழைக்கிறோம்… OTP வந்திருக்கும், அதை சொல்லுங்கள்”
என்று அழைத்து மோசடி செய்ய முயலுகின்றனர்.
OTP சொல்லாதீர்கள் — பிஎல்ஓவை நேரில் சந்திக்கவும்
போலீசார் தெரிவித்ததாவது:
“OTP கேட்டால் கூற வேண்டாம். ‘நாங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரை (PLO) நேரில் சந்தித்து விவரங்கள் அளிக்கிறோம்’ என்று பதிலளிக்க வேண்டும்.”
அழைப்பாளர்கள் கட்டாயப்படுத்தினாலோ, சந்தேகம் ஏற்பட்டாலோ அந்த எண்ணை பதிவு செய்து அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சைபர் குற்றம் தொடர்பான உதவி எண்கள் – புதுச்சேரி
| உதவி | தொடர்பு |
|---|---|
| பொதுவான சைபர் புகார் எண் | 1930 |
| சைபர் செல் தொலைபேசி | 0413-2276144 / 94892 05246 |
| மின்னஞ்சல் | cybercell-police@py.gov.in |
| ஆன்லைன் புகார் | www.cybercrime.gov.in |
பொது அறிவுறுத்தல்கள்
உங்கள் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர் & தொலைபேசி எண் வைத்திருக்க வேண்டும்
சந்தேகமான அழைப்புகள் வந்தால் நம்பாமல், அதிகாரப்பூர்வ எண்களை மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும்
OTP, வங்கி விவரம், தனிப்பட்ட தகவல் ஆகியவற்றை பகிர வேண்டாம்

