Home » எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் காரணமாக தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் அறிவிப்பு.

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் காரணமாக தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் அறிவிப்பு.

சென்னை,

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் காரணமாக, அங்கிருந்து இயக்கப்பட்ட சில முக்கிய விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 10 முதல் நவம்பர் 10, 2025 வரை இந்த மாற்று ஏற்பாடு அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே முன்பே தெரிவித்திருந்தது. இதனால், நவம்பர் 11ஆம் தேதிக்குப் பிறகு எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படுமா என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

  • உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் – தாம்பரம் இடையே இயக்கப்படும்.

  • கொல்லம் – சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை  இயக்கப்படும்.
  • ராமேஸ்வரம் – சென்னை சேது அதிவிரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை  இயக்கப்படும்.
  • ராமேஸ்வரத்தில் இரவு 8.50 மணிக்கு புறப்படும் சேது அதிவிரைவு ரெயில், தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வந்து சேரும்.
  • ராமேஸ்வரம் – சென்னை விரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை  இயக்கப்படும்.
  • ராமேஸ்வரத்தில் மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரெயில், தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வரும்.

  • மறு அறிவிப்பு வெளியாகும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்.
  • சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரெயில், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
  • பராமரிப்பு பணிகள் காரணமாக, ரெயில்கள் சென்னை எழும்பூர் நிலையத்திற்குள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *