கவுகாத்தி,
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வடகிழக்கு மாநிலமான அசாமின் கவுகாத்தியில் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. அங்கு சூரியன் சீக்கிரமே உதயமாகி, மாலை நேரத்தில் முன்பே மறைந்து விடுகிறது — அதாவது மாலை 4 மணிக்கே வெளிச்சம் மங்கிவிடும். இதனை கருத்தில் கொண்டு, இந்த டெஸ்ட் போட்டியின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, போட்டி வழக்கத்தை விட அரைமணி நேரம் முன்னதாக, காலை 9 மணிக்கே தொடங்கும்.
பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மதிய உணவு இடைவேளை பகல் 11.30 மணிக்கு வழங்கப்படும். ஆனால், இந்த டெஸ்டில் அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதலில் தேநீர் இடைவேளை பகல் 11 மணிக்கு (20 நிமிடங்கள்) வழங்கப்படும்; அதன் பிறகு மதிய உணவு இடைவேளை பிற்பகல் 1.20 மணி முதல் 2 மணி வரை விடப்படும்.

