புதுக்கோட்டை அருகே தொழில்நுட்ப கோளாறால் வானில் இருந்து சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம், சுமார் 14 மணி நேரம் கழித்து நள்ளிரவில் சேலத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டது.
விமானத்தின் எரிபொருள் முழுதும் வடிகட்டப்பட்ட பின்னர், இரு ரெக்கைகளும் பிரித்தெடுக்கப்பட்டு, கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.
விசாரணையில், அதற்கான நேரத்தில் சாலையில் வாகன நெரிசல் இல்லாததை உறுதி செய்த பிறகே விமானத்தை தரையிறக்கியதாக விமானி தெரிவித்துள்ளார்.

