பாட்னா,
மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீஹார் சட்டசபைக்கு, நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் படி, முதல் கட்டத்தில் 121 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 6ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு நிகழ்ந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி இன்று தெரிவித்ததாவது: பீகாரில் வரலாற்று சாதனையாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான 57.29 சதவீதத்தை விட 7.79 சதவீதம் அதிகம் என தெரிவித்துள்ளார்.

