Home » சத்தீஸ்கரில் 41 நக்சலைட்கள் போலீசில் சரண்

சத்தீஸ்கரில் 41 நக்சலைட்கள் போலீசில் சரண்

மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் காட்டம் காட்டி வந்ததால், அதை கட்டுப்படுத்த மத்திய அரசு பெரியளவில் நடவடிக்கைகள் மேற்கொண்டது.

அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் நக்சல் தாக்குதல்கள் இல்லாத தேசமாக இந்தியாவை மாற்றுவோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததைத் தொடர்ந்து, நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்தன.

பல முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் எலிமினேட் செய்யப்பட்டதால், அந்த அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன.


மாவோயிஸ்டுகளின் சரணடைவு அதிகரிப்பு

அரசின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட் – மாவோயிஸ்ட் உட்பட பல்வேறு நக்சல் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

மாவோயிஸ்ட் குழுக்கள்,

  • மபி,

  • மஹாராஷ்டிரா,

  • சத்தீஸ்கர்

மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில், முழுமையாக சரணடைய தயாராக உள்ளோம்; அரசு வழங்கும் மறுவாழ்வு திட்டத்தை ஏற்கிறோம் என தெரிவித்துள்ளன.
மேலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 வரை சரணடைவதற்கு அவகாசம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.


சத்தீஸ்கரில் பியாப்பூர் மாவட்டத்தில் 41 நக்சல்கள் சரண்

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 12 பெண்கள் உட்பட 41 நக்சலைட்கள் போலீசில் சரணடைந்தனர். இவர்களில் 32 பேருக்கு மொத்தம் ₹1.19 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

பிஜாப்பூர் மாவட்ட எஸ்பி ஜிதேந்திர குமார் யாதவ் கூறியதாவது:

“மாநில அரசின் கொள்கையை ஏற்று 41 நக்சலைட்கள் சரணடைந்துள்ளனர். இவர்களில் 39 பேர் தெற்குத் தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்தவர்கள். சரணடைந்தவர்கள் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜனநாயக முறையில் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கை வாழ விரும்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.

மாநில அரசின் விதிகளின்படி, அவர்களுக்கு உடனடி ஊக்கத்தொகையாக ₹50,000 வழங்கப்படும்.”


பரிசுத்தொகை விவரங்கள்

  • 9 நக்சல்கள் – தலா ₹8 லட்சம்

  • 3 நபர்கள் – தலா ₹5 லட்சம்

  • 12 பேர் – தலா ₹2 லட்சம்

  • 8 பேர் – தலா ₹1 லட்சம்


ஆண்டு முழுவதும் பெரும் சரணடைவு

அரசின் சமரசக் கொள்கை காரணமாக, இந்த ஆண்டு ஜனவரி முதல் பிஜாப்பூர் மாவட்டத்தில் மட்டும் 790 நக்சல்கள் வன்முறையை கைவிட்டு, முதன்மை சமூக நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்.

இவ்வாறு எஸ்பி ஜிதேந்திர குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *