ஈரோடு,
தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
2025–2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாசனக் காலத்திற்காக, ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலின் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு, 10.11.2025 முதல் 09.03.2026 வரை 120 நாட்கள், அதிகபட்சம் 5184.00 மில்லியன் கனஅடி நீரை திறந்து விட அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களில் உள்ள மொத்தம் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

