சென்னை: வரும் நவம்பர் 17ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
இன்று (நவம்பர் 12) கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
வரும் நவம்பர் 17ஆம் தேதி கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* மயிலாடுதுறை
* தஞ்சாவூர்
* நாகப்பட்டினம்
* திருவாரூர்
வரும் நவம்பர் 18ஆம் தேதி கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

