சென்னை:
வரும் நவம்பர் 29-ஆம் தேதி, தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 28) மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலால் தமிழகக்கடலோரத்தில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, அடுத்த 6 நாட்களுக்கான மழை எச்சரிக்கை விவரங்களை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
நவம்பர் 26 (இன்று)
கனமழை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்
நவம்பர் 27
கனமழை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர்
நவம்பர் 28
கனமழை: ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை
மிக கனமழை: தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால்
நவம்பர் 29 – 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
அதி கனமழை (Red Alert):
செங்கல்பட்டு
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
மிக மிக கனமழை:
புதுச்சேரி
காரைக்கால்
மிக கனமழை:
சென்னை
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
பெரம்பலூர்
அரியலூர்
தஞ்சை
கனமழை:
வேலூர்
திருப்பத்தூர்
தர்மபுரி
சேலம்
திருச்சி
புதுக்கோட்டை
நவம்பர் 30
ரெட் அலர்ட்:
திருவள்ளூர்
மிக கனமழை:
சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
ராணிப்பேட்டை
கனமழை:
வேலூர்
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
விழுப்புரம்
புதுச்சேரி
சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து, தேவையான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

