சென்னை:
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் நெல்லை–தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 21,000 பேர் ஆயுட்கால உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், இந்த சங்கத்தின் பெயரில் போலியான WhatsApp குழு தொடங்கப்பட்டு, அதில் சங்க தலைவர் ஆனந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அவர்களின் மனைவிகள், மகள்கள் தொடர்பாக தொடர்ச்சியாக அவதூறு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை தொடர்ந்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சங்கத்தின் பெயரில் போலி WhatsApp குழு தொடங்கி அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட போரூரைச் சேர்ந்த செல்வராஜ், சுரேஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

