நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. வெள்ளி விலையும் ஓரளவு குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரத்தைப் பார்ப்போம்.
சர்வதேச பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்தே தங்கத்தின் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது உலகின் மிக முக்கியமான மதிப்புள்ள சொத்துகளில் ஒன்றாக திகழும் தங்கத்தை, தனிநபர்கள் மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கி உட்பட பல நாடுகளின் மத்திய வங்கிகளும் வாங்கிக் குவித்து வருகின்றன. இதன் விளைவாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சங்களை எட்டியது.
ஏற்றமும் – இறக்கமும்
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம்–இறக்கம் என மாறி வருகிறது. இதனால் விலையில் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது. குறிப்பாக, நவம்பர் 1ஆம் தேதி சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மிகுந்த ஏற்ற–இறக்கங்களை சந்தித்துள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை மாற்றங்கள்:
நவம்பர் 11 (செவ்வாய்) – ரூ.1,760 உயர்வு
நவம்பர் 12 (புதன்) – ரூ.800 குறைவு
நவம்பர் 13 (வியாழன்) – ரூ.2,400 உயர்வு
நவம்பர் 14 (வெள்ளி) – ரூ.1,280 குறைவு
நவம்பர் 15 (சனி) – ரூ.1,520 குறைவு
நவம்பர் 17 (திங்கள்) – ரூ.80 குறைவு
நவம்பர் 18 (செவ்வாய்) – ரூ.1,120 குறைவு
நேற்று கடும் உயர்வு
இதனிடையே தங்கம் விலை நேற்று (நவம்பர் 19) காலை ரூ.800வும், மாலை ரூ.800வும் உயர்ந்து, ஒரே நாளில் மொத்தம் ரூ.1,600 அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.92,800க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை
இந்நிலையில் இன்று (நவம்பர் 20) தங்க விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,500 என்றும், ஒரு சவரன் ரூ.92,000 என்றும் விற்பனை ஆகிவருகிறது.
வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.6 உயர்ந்திருந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.173க்கு விற்பனை செய்யப்படுகிறது.

