தமிழ்நாடு மருத்துவத் துறையில் பெரிய அளவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 1,100 Assistant Surgeon (General) பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவத் துறையில் வேலை தேடும் MBBS பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
பணியிட விவரம்
-
பதவி: Assistant Surgeon (General)
-
மொத்த காலியிடங்கள்: 1,100
கல்வித் தகுதி & தகுதி நிபந்தனைகள்
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ் குறிப்பிடப்பட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்:
✔ MBBS Degree
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் MBBS முடித்திருக்க வேண்டும்.
✔ Medical Council Registration
Madras Medical Registration Act 1914 படி செல்லுபடியாகும் மருத்துவர் பதிவை (TN Medical Council Registration) பெற்றிருக்க வேண்டும்.
✔ House Surgeon Experience
குறைந்தது 12 மாதங்கள் House Surgeon (CRRI) அனுபவம் அவசியம்.
சம்பளம்
இந்த Assistant Surgeon பணியில் அரசின் விதிமுறைகள்படி சம்பளம் லட்சத்தை எட்டும் அளவு வழங்கப்படும். அனுபவம் & அலவன்ஸ் அடிப்படையில் அதிகரிக்கும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
-
MBBS முடித்தவர்கள்
-
மெடிக்கல் ரெஜிஸ்ட்ரேஷன் வைத்திருப்பவர்கள்
-
1 ஆண்டுக் கட்டாய CRRI முடித்தவர்கள்
-
மருத்துவத்துறையில் அரசு வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

