முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 46 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கலாம் என கூறப்பட்டது.
அதன்படி, பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். காணொலி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

