திருநெல்வேலி
சென்னை,
தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:–
திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி வட்டத்தில் அமைந்துள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, 10.11.2025 முதல் 31.03.2026 வரை 142 நாட்கள், நீர் இருப்பு மற்றும் வரத்தைக் கருத்தில் கொண்டு, வினாடிக்கு அதிகபட்சம் 100 கனஅடி அளவில் நீரை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களிலுள்ள மகிழடி, நம்பித்தலைவன் பட்டயம் ஏர்வாடி, ராஜாக்கள்மங்கலம், வள்ளியூர், தளபதிசமுத்திரம், அச்சம்பாடு, கள்ளிகுளம் ஆகிய பாசனப் பகுதிகளில் உள்ள மொத்தம் 5,780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

