பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தின் மைசூரு மாவட்டம் சரகூர் தாலுகா ஹலி ஹிகுடிலு கிராமத்தை சேர்ந்த 35 வயதான விவசாயி சவுதயா நாயக் இன்று காலை கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கு புலி தாக்கி அவரை கொன்றது.
வனப்பகுதிக்கு சென்ற சவுதயா நாயக் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கிராமத்தினர் தேடுதல் நடத்தினர். அப்போது, புலி தாக்கி வனப்பகுதியில் சடலமாக கிடந்த சவுதயா நாயக்கின் உடலை அவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து, புலிகள் சரணாலயம் அமைந்துள்ளதால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. கடந்த 15 நாட்களாக இந்த பகுதியில் புலி தாக்குதலால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பெந்திபூர் மற்றும் நஹராலொல் புலிகள் காப்பகங்களில் சுற்றுலா பயணிகள் சபாரி மற்றும் டிரெக்கிங் செல்ல வனத்துறை தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

