வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘சென்யார்’ என்று பெயரிடப்படும் என தென் மண்டல வானிலை மைய இயக்குநர் அமுதா தகவல் தெரிவித்தார்.
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தென் மண்டல வானிலை மைய இயக்குநர் அமுதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்படும்
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
48 மணி நேரத்தில் புயலாக வலுப்பட வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலோரப் பகுதியில் உருவாகும் தாழ்வு மண்டலம், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்படக்கூடும்.
அரபிக்கடலில் கீழடுக்கு சுழற்சியும் உருவாகியுள்ளதால், மூன்று சுழற்சிகளின் கோர்ப்பு காரணமாக சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 24 மணி நேர மழைப்பதிவு
மாஞ்சோலை ஊத்து (நெல்லை) – 23 செ.மீ.
நாலுமுக்கு – 22 செ.மீ.
சேத்தியாத்தோப்பு, காக்காச்சி – தலா 21 செ.மீ.
மாஞ்சோலை – 19 செ.மீ.
பரங்கிபேட்டை, சிதம்பரம், புவனிகிரி, மதுக்கூர், திருக்குவளை – தலா 14 செ.மீ.
இன்றைய மழை எச்சரிக்கை
நெல்லை, தென்காசி – ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை)
கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை – கனமழை.
நாளைய மழை எச்சரிக்கை
ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி – கனமழை.
நாளை மறுநாள்
ஆறு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.
டெல்டா மாவட்ட எச்சரிக்கை – நவம்பர் 28
தஞ்சை, திருவாரூர், நாகை – மிக கனமழை
தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை – கனமழை
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் – நவம்பர் 29
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை – மிக கனமழை
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சை, நாகை – கனமழை
நவம்பர் 30 – திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்
திருவள்ளூர் – மிக கனமழை
விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, சென்னை – கனமழை
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்படும்
வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்படும் என்றும், டிசம்பர் மாத மழை நிலை குறித்த தகவல் நவம்பர் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அமுதா தெரிவித்தார்.
5% அதிகமான மழை
வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை விட 5% அதிகமான மழை பதிவாகியுள்ளதாகவும்,
திருப்பூர், கரூர், திண்டுக்கல், சேலம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மழை குறைவாக உள்ளதெனவும் தெரிவித்தார்.

