
போலி ஆவணங்கள் மூலம் SIM card பெறுவது, மற்றவர்களின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி SIM activate செய்வது, IMEI எண்ணை மாற்றுவது அல்லது telecom identifiers-ஐ மோசடியாக பயன்படுத்துவது கடுமையான குற்றம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை எச்சரித்துள்ளது. இத்தகைய மீறல்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ₹50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Telecommunications Act, 2023-ன் Section 42 கீழ், fraud, cheating அல்லது impersonation மூலம் SIM பெறுவது மற்றும் IMEI உள்ளிட்ட telecom identifiers-ஐ tamper செய்வது தண்டனைக்குரிய குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சில பிரிவுகள் cognizable மற்றும் non-bailable offences ஆகவும் கருதப்படுகின்றன.
மேலும், தங்களது பெயரில் வாங்கப்பட்ட SIM card-ஐ வேறு நபர்களிடம் கொடுத்து பயன்படுத்த அனுமதிப்பதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த SIM பின்னர் மோசடியில் பயன்படுத்தப்பட்டால், அசல் subscriber-க்கும் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சத்தீஸ்கரில் ஒரு SIM விற்பனையாளர், பொதுமக்களின் அனுமதியின்றி அவர்களது அடையாள ஆவணங்களை பயன்படுத்தி 25 SIM connections activate செய்தது கண்டறியப்பட்டது. அந்த connections முடக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட விற்பனையாளர் blacklist செய்யப்பட்டார்.
தங்கள் பெயரில் எத்தனை mobile numbers இயங்குகின்றன என்பதை Sanchar Saathi portal அல்லது mobile app மூலம் சரிபார்த்து, தெரியாத அல்லது தேவையற்ற numbers இருந்தால் block/report செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.