2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் Traditional MMA 60kg பிரிவில் இந்தியாவின் சுசிகா தரியால் (Suchika Tariyal) வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். Asian Games MMA பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

36 வயதான சுசிகா, காலிறுதியில் மங்கோலியாவின் Altanchimeg Baigalmaa-வை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார். ஜூடோ, குராஷ், ஜூ-ஜிட்சு போன்ற பல combat sports-ல் அனுபவம் பெற்ற அவர் சமீபத்தில் MMA-க்கு மாறியிருந்தார்.

அரையிறுதியில் சிங்கப்பூரின் Hui Hoon Teo-வை எதிர்கொண்ட சுசிகா கடுமையாகப் போராடினார். போட்டி சமநிலையில் முடிந்தபோதும், technical tiebreak விதிப்படி எதிரணி வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முடிவால் சுசிகா களத்திலேயே கண்கலங்கினார்.

இருப்பினும், வெண்கலப் பதக்கத்துடன் சுசிகா இந்திய MMA வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதியுள்ளார். பயிற்சியாளர் கூறிய game plan-ஐ பின்பற்றி takedown, ground control மற்றும் submission ஆகியவற்றில் கவனம் செலுத்தி “என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்” என்ற மனநிலையுடன் போட்டியிட்டதாக அவர் கூறியுள்ளார்.