
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் — முதல் ODI நாளை
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடர் நாளை, செப்டம்பர் 27, 2026 அன்று தொடங்குகிறது. முதல் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள Greenfield International Stadium-ல் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ODI செப்டம்பர் 30 அன்று குவாஹாட்டியிலும், மூன்றாவது ODI அக்டோபர் 3 அன்று New Chandigarh-லும்நடைபெறும்.
Shubman Gill தலைமையில் இந்திய அணி
இந்த ODI தொடரில் இந்திய அணியை Shubman Gill வழிநடத்துகிறார். KL Rahul துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். Rohit Sharma மற்றும் Virat Kohli ஆகிய அனுபவமிக்க வீரர்களும் ODI அணியில் இடம்பெற்றுள்ளனர். Yashasvi Jaiswal, Ruturaj Gaikwad, Dhruv Jurel, Nitish Kumar Reddy, Ravindra Jadeja, Kuldeep Yadav மற்றும் Mohammed Siraj உள்ளிட்டோரும் அணியில் உள்ளனர்.
இந்திய ODI அணி
Shubman Gill (C), Rohit Sharma, Virat Kohli, Ruturaj Gaikwad, KL Rahul (VC), Dhruv Jurel, Nitish Kumar Reddy, Ravindra Jadeja, Kuldeep Yadav, Prasidh Krishna, Gurnoor Brar, Mohammed Siraj, Auqib Nabi, Yashasvi Jaiswal, Naman Dhir ஆகியோர் ODI squad-ல் இடம்பெற்றுள்ளனர்.
ODI தொடருக்குப் பிறகு 5 T20 போட்டிகள்
மூன்று ODI போட்டிகள் முடிந்ததும் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஐந்து T20I போட்டிகளில் மோத உள்ளன. அக்டோபர் 6 அன்று லக்னோவில் முதல் T20 தொடங்கி, ராஞ்சி, இந்தூர், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் அடுத்த போட்டிகள் நடைபெறும்.
இந்தியாவின் புதிய Home Season தொடக்கம்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த தொடர் இந்தியாவின் 2026-27 சர்வதேச home season-ன் தொடக்கமாக அமைந்துள்ளது. இந்த season-ல் பின்னர் இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகளையும் இந்தியா எதிர்கொள்ள உள்ளது.