டாக்கா:
இந்தியாவுக்கு அண்டையான வங்காளதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணியளவில், அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாகக் கொண்டு இந்நிலநடுக்கம் பதிவானது.
ரிக்டர் அளவில் 5.7 என பதிவான இந்த அதிர்வால் கட்டிடங்கள் பலத்த அதிர்வுக்கு உள்ளாகின. இதனால் மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் கூடி தஞ்சமடைந்தனர்.
இந்தநிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
சம்பவ இடங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

