சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி கவாய் நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் இன்று பதவியேற்றார். டெல்லி தர்பார் அரங்கில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களை பதவிப் பிரமாணம் செய்யவைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், டெல்லி துணை நிதிநிலை ஆளுநர், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல் மலேசியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் கலந்து கொண்டனர்.
சூர்யகாந்த், தலைமை நீதிபதியாக 2027 பிப்ரவரி 9-ந்தேதி வரை சுமார் 15 மாதங்கள் பதவியில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சூர்யகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தனது பதிவில்,
“தலைமை நீதிபதியாக பதவியேற்றிருக்கும் சூர்யகாந்தின் எதிர்கால பயணம் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்”
என்று கூறியுள்ளார்.