புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில், 5-ம் தலைமுறை எஸ்யு-57 போர் விமானங்களை வழங்க ரஷ்யா தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு நிறுவனம் ரோஸ்டெக் தலைமைச் செயலர் செர்கே செமெசோவ் கூறியதாவது: 5-ம் தலைமுறை போர் விமானங்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. அதன்படி, ரஷ்யாவில் தயாரிக்கப்படும் எஸ்யு-57 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன.
அடுத்தடுத்த கட்டங்களில் எஸ்யு-57 விமான தயாரிப்பு பணிகள் இந்தியாவுக்கு முழுமையாக மாற்றப்பட உள்ளன. இதில் என்ஜின்கள், சென்சார்கள், போர் விமான உதிரிப்பாகங்கள் தயாரிப்புகளும் அடங்கும். பல தசாப்தங்களாக இருக்கும் நெருக்கடியான கால கட்டங்களிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சுமூகமாக தொடர்ந்து வருகிறது.
எனவே, இந்திய தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகள் ரஷ்யா முழுமையாக ஏற்றுக் கொள்ளும். இந்தியாவுக்கான தடைகள் இருந்தாலும், அதன் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான ஆயுதங்களை நாங்கள் முன்பே வழங்கி விட்டோம். அடுத்த ஆண்டு போலவே, தற்போதும் இதை தொடர்கிறோம்.
இந்தியாவுக்கு தேவையான அனைத்து ராணுவ உபகரணங்களையும் ரஷ்யா வழங்கும். எஸ்-400 அல்லது எஸ்யு-57 போன்ற நவீன தொழில்நுட்பம் இந்தியாவிற்கு தேவையானபடி, அதனை ஆதரிக்க ரஷ்யா தயார் நிலையில் உள்ளது என்று செர்கே தெரிவித்தார்.
இந்தியாவிற்கு வழங்கப்படும் நவீன தலைமுறை போர் விமானங்களில் ஒற்றை இன்ஜினுடைய எஸ்யு-75 செக்மேட் போர் விமானமும் அடங்கும். எஸ்யு-75 தயாரிப்பு ஆலையை நட்பு நாட்டில் அமைக்க ரஷ்யா முன்வருகிறது, இதற்கு இந்தியாவும் மிகுந்த விருப்பத்துடன் உறுதிசெய்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவுக்கு வருவாய் அதிகரிக்கும்; பிரமோஷன் போல, பல பில்லியன் டாலர் வருவாய் உருவாகும் என்று இந்திய விமானப்படை தலைவர் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் விஜயந்தர் கே. தாக்கூர் தெரிவித்தார்.

