கொல்கத்தா: நிலக்கரி மாஃபியா மற்றும் சுரங்க முறைகேடு வழக்குகள் தொடர்பாக மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை விரிவான சோதனைகள் நடத்தி வருகிறது.
நிலக்கரி திருட்டு, சட்டவிரோத சுரங்கம் மற்றும் கடத்தல் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, கொல்கத்தா மற்றும் ராஞ்சி மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜார்க்கண்டில் நிலக்கரி திருட்டு மற்றும் கடத்தல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சுமார் 18 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அனில் கோயல், சஞ்சய் உத்யோக், எல்.பி. சிங், அமர் மண்டல் உள்ளிட்டோருடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் துர்காபூர், புருலியா, ஹவுரா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத சுரங்கம், நிலக்கரி போக்குவரத்து, சேமிப்பு போன்ற வழக்குகள் தொடர்பாக சுமார் 24 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. நரேந்திர கார்கா, யுதிஷ்டார் கோஷ், கிருஷ்ணா முராரி கயல், சின்மயி மொண்டல், ராஜ்கிஷோர் யாதவ் உள்ளிட்டோருடன் தொடர்புடைய இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இரு மாநிலங்களிலும் 100-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த மாபெரும் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மசோதா முடிவில் காலக்கெடு விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
மசோதாக்கள் மீது ஜனாதிபதி மற்றும் ஆளுநர் முடிவெடுக்க ஒரு குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

