சென்னை: வங்கக்கடலில் நவம்பர் 22-ஆம் தேதியளவில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் நவம்பர் 23 வரை தொடர்ச்சியாக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது நாளை (நவம்பர் 18) மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரும். மேலும் நவம்பர் 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி உருவாகி, 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளது.
மழை வாய்ப்பு (நவம்பர் 18–23):
நாளை: தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை.
நாளை கனமழை பெறக்கூடிய மாவட்டங்கள்:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி.நவம்பர் 19, 20:
மயிலாடுதுறை, கடலூர் – ஓரிரு இடங்களில் கனமழை.நவம்பர் 21:
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் – கனமழை.நவம்பர் 22:
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி – பல இடங்களில் கனமழை.நவம்பர் 23:
மேற்கண்ட மாவட்டங்களுடன் சேர்த்து அரியலூர், சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்பு.
சென்னை வானிலை:
நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
கடலோர எச்சரிக்கை:
தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் நாளை மணிக்கு 35–45 கிமீ வேகத்திலும், இடைவிடாது 55 கிமீ வரை சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை.
இன்று காலை 8.30 வரை பதிவான அதிகபட்ச மழை அளவு:
கோடியக்கரை (நாகை) – 12 செமீ
செம்பனார்கோவில் (மயிலாடுதுறை) – 9 செமீ
தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) – 8 செமீ
வேதாரண்யம், தலைஞாயிறு, கொள்ளிடம், சீர்காழி – தலா 7 செமீ
பாம்பன், புதுச்சேரி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை – தலா 6 செமீ
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

