வங்கதேசத்தில் ஆட்சிக்கு எதிராக 2024 ஜூலை–ஆகஸ்ட் மாதங்களில் நடந்த தொடர் போராட்டங்களில் உருவான வன்முறையில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்த அப்போது பதவியில் இருந்த பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு கூறி, அவர்மீது வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், போராட்ட வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நேரடியாகப் பொறுப்பு உள்ளார் என நிரூபிக்கப்பட்டதால், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

