சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக (மஞ்சள் எச்சரிக்கை) சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று (நவம்பர் 17) மிக கனமழை (ஆரஞ்சு எச்சரிக்கை) வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • நாகப்பட்டினம்

  • திருவாரூர்

  • மயிலாடுதுறை

  • செங்கல்பட்டு

  • காஞ்சிபுரம்

  • சென்னை

  • திருவள்ளூர்

இன்று (நவம்பர் 17) கனமழை (மஞ்சள் எச்சரிக்கை) வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • விழுப்புரம்

  • கடலூர்

  • அரியலூர்

  • தஞ்சாவூர்

  • புதுக்கோட்டை

  • ராமநாதபுரம்

  • தூத்துக்குடி

  • திருநெல்வேலி

  • கன்னியாகுமரி

நாளை (நவம்பர் 18) கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • கன்னியாகுமரி

  • திருநெல்வேலி

  • தென்காசி

  • தூத்துக்குடி

  • ராமநாதபுரம்

  • விருதுநகர்

  • சிவகங்கை

  • தேனி

நவம்பர் 22ஆம் தேதி கனமழை (மஞ்சள் எச்சரிக்கை) வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • திருவள்ளூர்

  • சென்னை

  • காஞ்சிபுரம்

  • செங்கல்பட்டு

  • விழுப்புரம்

  • கடலூர்

  • மயிலாடுதுறை

  • தஞ்சாவூர்

  • நாகப்பட்டினம்

  • புதுக்கோட்டை

  • ராமநாதபுரம்

  • தூத்துக்குடி

  • திருநெல்வேலி

  • கன்னியாகுமரி

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.