கேரளைக்கு பிறகு ராஜஸ்தானிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த செயல்பாட்டில் சுமார் 65 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்போது எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பணிச்சுமை அதிகரித்துள்ளதாக கூறும் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, எஸ்ஐஆர் தொடர்பான பணிகளை நாளை முதல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.