சென்னை,
இந்தியாவின் தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணிப்பதாக அறியப்படும் ஃபலோடி சத்தா பஜார் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இந்த ‘கற்பனை’ அல்லது யூகச் சந்தையின் கணிப்புகள் கடந்த போது பாஜக கூட்டணியின் வெற்றி எண்ணிக்கைகளை கிட்டத்தட்ட சரியாக கணித்ததால், இப்போது தமிழகத்திற்கான கணிப்புகளுக்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கணிப்பின்படி, திமுக கூட்டணி மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் 234 இடங்கள் இருக்கும் நிலையில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 118 இடங்கள் ஆகும். ஆனால் ஃபலோடி சத்தா பஜார் பெட்டிங்கின் படி, திமுக கூட்டணி 140 முதல் 143 இடங்களை வரை கைப்பற்றும் என கூறப்படுகிறது. இது நேரடியாக அரசு அமைக்கும் வலுவான நிலையைச் சுட்டிக்காட்டுகிறது; முதல்வர் ஸ்டாலின் அரசு மீண்டும் அரியணையில் உட்காருவது கிட்டத்தட்ட உறுதி என்று பலர் கருதுகிறார்கள்.
இதற்கு நேர் எதிராக, எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக நிலைமை மிகவும் வீழ்ச்சியில் இருப்பதாக இந்த கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. 45 முதல் 65 இடங்கள் வரை மட்டுமே அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது கடந்த தேர்தலை விட குறிப்பிடத்தக்க குறைவு; எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி இந்த தகவலை அதிர்ச்சியுடன் எதிர்கொள்கிறது.
முதன்முறையாக அரசியல் களத்தில் இறங்கிய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக), இந்தக் கணிப்பு 7 முதல் 9 இடங்கள் வரை வெற்றி வாய்ப்பு தருகிறது. ஒரு புதிய கட்சிக்கு இது நல்ல தொடக்கம்; ஆனால் விஜய் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மெருகு போடும் அளவுக்கு இது போதுமானதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மொத்த இடங்கள் 234, ஆட்சி அமைக்கத் தேவையான எல்லை 118; இந்தக் கணிப்பின் இலக்கு, திமுக இருப்பைப் பலப்படுத்துவது, அதிமுக நிலையை குறைத்துக் காட்டுவது, தவெக்கை ஒரு சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க கட்சியாக மட்டுப்படுத்துவது ஆகியவையே. இந்தக் கணிப்புகள் அதிகாரப்பூர்வமானவை அல்ல; ஆனால் மே 4வது தேதி வாக்கு எண்ணிக்கை மூலம் யார் உண்மையான ‘கிங்’ என உலகம் அறிந்துகொள்ளும்.