சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்துள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம். அதை ஏற்றுக்கொள்கிறோம். திமுக பார்வில்லை வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை” என்று கூறினார்.

விஜய்யின் பிரம்மாண்ட வெற்றி
தமிழக சட்டசபைத் தேர்தலில் புதிதாகக் களம் கண்ட விஜய் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே நூற்று எட்டு தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுகக் கூட்டணி எழுபத்து மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்தார்.
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்
மக்கள் என்னத் தீர்ப்பைக் கொடுத்துள்ளார்களோ அதை ஏற்றுக்கொள்கிறோம், தலைவணங்குகிறோம் என்று உதயநிதி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்துக் கேள்வி கேட்கிறீர்கள். உங்கள் ஊகத்திற்கு நான் பதிலளிக்க முடியாது. எங்கள் தலைவரும் பொதுச்செயலாளரும் இது குறித்து முடிவு செய்வார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதன்படி நாங்கள் செயல்படுவோம்.
சொந்தத் தொகுதியில் வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் மக்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்படுவேன். திமுக பார்வில்லை வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. தங்கள் கட்சியே வெற்றி பெறும் என்று எல்லோரும் விரும்புவார்கள். அதேபோலத்தான் நாங்களும் விரும்பினோம். சிறப்பானப் பணிகளைச் செய்தோம், அதனால் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம்.
மக்கள் முடிவு மட்டுமே
மக்கள் முடிவு எடுத்துள்ளார்கள். அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் மக்களுக்காக எங்கள் கடமையை நாங்கள் செய்து கொண்டே இருப்போம். இளைஞர்களுக்கு இந்த முறை நிறைய வாய்ப்பு கொடுத்துள்ளோம். வெற்றி பெற்றுள்ளார்கள். மக்கள் முடிவு எடுத்துள்ளார்கள். ஆட்சி அமையும்போது என்னுவது பார்ப்போம். ஏன் இவ்வளவு அவசரம்? என்றார் உதயநிதி.
ஒரு ஓட்டு வித்தியாசத் தோல்வி
முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்குப் பதிலளித்த உதயநிதி, “நீதிமன்றத்திற்கு வருவது குறித்துத் தலைவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.