நாடு முழுவதும் காலியாக உள்ள Super Speciality மருத்துவப் படிப்பு இடங்களை நிரப்ப, NEET-SS qualifying percentile-ஐ 50th percentile-ல் இருந்து 30th percentile ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு வரவிருக்கும் Special Stray Vacancy Round-க்கு மட்டும் பொருந்தும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

NEET-SS counselling-ன் இரண்டாவது சுற்று முடிந்த பின்னரும் 1,857 Super Speciality seats காலியாக உள்ளன. அதில் 1,094 DM/MCh seats மற்றும் 763 DNB-SS seats அடங்கும். இவை பல highly specialised medical மற்றும் surgical disciplines-க்கு சேர்ந்தவை.

முன்னதாக, ஆயிரக்கணக்கான seats காலியாக இருப்பதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், cutoff குறைப்பது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தது. அதன் பின்னர் stakeholders-ஐ ஆலோசித்த மத்திய அரசு, available training capacity வீணாகாமல் இருக்க qualifying percentile-ஐ 30 ஆக குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த cutoff reduction காரணமாக சுமார் 6,000 கூடுதல் candidates Special Stray Vacancy Round-ல் தகுதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஒரு seat-ஐ பெற்றும் join செய்தும் இருக்கும் candidates இந்த special round-ல் பங்கேற்க முடியாது; upgradation-க்கும் அனுமதி இருக்காது.

தமிழ்நாட்டுக்கு தொடர்புடைய மற்றொரு முக்கிய அம்சமாக, காலியாக உள்ள 40 in-service Super Speciality seats மாநிலத்துக்கு திரும்ப வழங்கப்படுகின்றன என்ற தகவலும் நீதிமன்ற விசாரணையில் வெளியாகியுள்ளது.