சூரி நடித்த ‘மண்டாடி’ திரைப்படம் உலகளாவிய box office-ல் ₹80 கோடி வசூலை கடந்துள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் RS Infotainment இன்று அறிவித்துள்ளது. செப்டம்பர் 10 அன்று வெளியான படம், தொடர்ந்து நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

செப்டம்பர் 17 முடிய, 8 நாட்களில் படம் ₹79.93 கோடி worldwide gross வசூல் செய்ததாக box-office tracker Sacnilk தரவை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகின. இதில் இந்திய net collection சுமார் ₹57.30 கோடி, India gross சுமார் ₹67.03 கோடி, overseas gross ₹12.90 கோடி என தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று படம் ₹80 கோடி milestone-ஐ கடந்துவிட்டதாக தயாரிப்பு தரப்பே அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ₹50 கோடிக்கும் அதிகமான gross collection பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூரியுடன் Suhas, Mahima Nambiar, Sathyaraj உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடலோர மக்களின் வாழ்க்கை மற்றும் பாரம்பரிய படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்ட இந்த படம், சூரியின் lead-actor career-ல் மிகப்பெரிய commercial success ஆக உருவெடுத்துள்ளது.