இந்தியாவின் முன்னணி பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, 2026 Asian Games மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது அவரது முதல் Asian Games பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மீராபாய் மொத்தமாக 198 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். Snatch பிரிவில் 87 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கிய அவர், Clean & Jerk பிரிவில் 111 கிலோ எடையை பதிவு செய்தார். இந்த மொத்த எடையுடன் அவர் Silver Medal உறுதி செய்தார்.

2023 Hangzhou Asian Games-ல் மீராபாய் பதக்கத்தை மிக நெருக்கமாக தவறவிட்டிருந்தார். அப்போது காயம் காரணமாக இறுதி Clean & Jerk முயற்சியை நிறைவு செய்ய முடியாமல் நான்காவது இடத்தில் முடித்தார். அதனால் இம்முறை கிடைத்த வெள்ளி, அவரது Asian Games career-ல் நீண்டநாள் எதிர்பார்த்த முக்கிய சாதனையாக அமைந்துள்ளது.

மீராபாய் ஏற்கனவே உலக அளவில் பல பெரிய சாதனைகளைப் பதிவு செய்தவர். Tokyo Olympics-ல் மகளிர் 49kg பிரிவில் வெள்ளி வென்ற அவர், 2017 World Championships-ல் தங்கமும் வென்றுள்ளார். Commonwealth Games-லும பலமுறை பதக்கம் வென்றுள்ள அவர், 2026 Glasgow Commonwealth Games-ல் 48kg பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

2021 Asian Weightlifting Championships-ல் Clean & Jerk பிரிவில் 119 கிலோ எடையை தூக்கி உலக சாதனை படைத்திருந்தார். அதிவேக strength-to-bodyweight ratio கொண்ட lifters-ல் ஒருவராக நீண்டகாலமாக இருந்து வரும் மீராபாய்க்கு, Asian Games medal மட்டும் இதுவரை கிடைக்காமல் இருந்தது. அந்த குறையும் தற்போது தீர்ந்துள்ளது.

இந்த வெள்ளிப் பதக்கம் இந்தியாவின் 2026 Asian Games medal tally-யிலும் முக்கிய சேர்க்கையாக அமைந்துள்ளது. இந்தியா ஏற்கனவே shooting, cricket உள்ளிட்ட பிரிவுகளில் பதக்கங்களை வென்றிருந்த நிலையில், weightlifting-லும பதக்கம் கிடைத்துள்ளது.

காயங்களில் இருந்து மீண்டு தொடர்ந்து உயர்மட்ட போட்டிகளில் செயல்பட்டு வந்த மீராபாய்க்கு, இந்தப் பதக்கம் அவரது comeback consistency-க்கும் பெரிய அங்கீகாரம். குறிப்பாக 2023 Asian Games-ல் நான்காவது இடத்தில் முடித்த ஏமாற்றத்திற்குப் பிறகு, இம்முறை podium-ஐ அடைந்திருப்பது அவரது career-ல் ஒரு முக்கிய milestone ஆகும்.