திருவனந்தபுரம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் புத்தூர் பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட லாரி ஒன்று பொருட்களை ஏற்றி சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், லாரி தறிகெட்டு வேகமாக ஓடத் தொடங்கியது.

இதனால் எதிரே வந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி சேதப்படுத்திய பின்னர், அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியதில் லாரி நின்றது.

இந்த விபத்தில் சிறுமி உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மலப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.