புதுடெல்லி

நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தின் போது பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் பேசியதாவது:

  • இந்த ஆண்டு எதிர்க்கட்சியினர் தினசரி இடையூறுகள் ஏற்படுத்தி, அவையின் செயல்பாட்டை பாதித்தனர். புதிய எம்.பி.க்கள் கற்றுக்கொள்ள வந்தாலும், எதிர்க்கட்சியினர் அவையை திரையரங்கமாக மாற்றிவிட்டனர்.

  • காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. பிரதமர் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யவில்லை; மக்களின் இதயங்களை ஹேக் செய்துள்ளார். வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை காலாவதியானது.

  • அரியானா தேர்தலில் மோசடி நடந்ததாக வெளிநாட்டு பெண்ணின் புகைப்படத்தை காட்டிய எதிர்க்கட்சியினர், எந்த ஆதாரமும் இல்லாமல் அவையில் அவளின் கண்ணியத்தை காயப்படுத்தினர். அந்த பெண் இந்தியாவிற்கு ஒருபோதும் வரவில்லை என்றும், தேர்தலுடன் சம்பந்தமில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

  • பெண்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது; குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, வீடுகளில் கழிப்பறைகள், இலவச எரிவாயு இணைப்புகள் போன்றவை அதில் அடங்கும்.

  • பிரியங்கா காந்தி, பா.ஜ.க. கடந்த காலத்தை விட்டுவிட வேண்டும் என கூறுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியால் தங்கள் கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாது. சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்களித்தார். பிரியங்கா காந்தி கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்தார்.