புதுடெல்லி
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தின் போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கமளித்தார்.
அவர் கூறியதாவது:
எஸ்.ஐ.ஆர். பணிகள் தேர்தல் ஆணையத்தின் கீழ் நடைபெறுகின்றன; அரசியல் சாசனத்தின் பிரிவு 326-ன் படி வாக்காளர் பட்டியலைத் தெளிவாகத் தயாரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கே உள்ளது.
இரட்டை பதிவு, இறந்தவர்களின் பெயர்கள், வெளிநாட்டினரின் பெயர்கள் ஆகியவற்றை நீக்குவதே எஸ்.ஐ.ஆரின் முக்கிய பணி.
இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறக்கூடாது; இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்படும்.
நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த முடியாது; ஆனால் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசலாம், அது அரசின் பொறுப்புக்குள் வரும்.
அமித்ஷா மேலும், “வாக்காளர் பட்டியலை சரி செய்வதே எஸ்.ஐ.ஆரின் நோக்கம். எதிர்க்கட்சிகள் சட்டவிரோத குடியேறிகளின் பெயர்களை வைத்தே வாக்கு வலிமையைப் பெற முயல்கின்றன; ஆனால் எஸ்.ஐ.ஆர். அவற்றை நீக்கும்” எனக் குறிப்பிட்டார்.