தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 138 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தெர்மல்நகர் பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ரீதன் (21) மற்றும் சேகர் மகன் சதீஷ் (24) ஆகிய இருவரும், கடந்த 11.11.2025 அன்று தெர்மல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (10.12.2025) தெர்மல் காவல் நிலைய போலீசார் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.