WINNER Mino-க்கு தண்டனை

தென் கொரிய K-pop குழுவான WINNER-ன் உறுப்பினர் Song Min-ho (Mino), கட்டாய ராணுவ சேவைக்கு மாற்றாக சமூக சேவை பணியில் இருந்த காலத்தில் பல நாட்கள் அனுமதியின்றி பணிக்கு வராத வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Seoul Western District Court, அவருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, அதை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளது. அதாவது உடனடியாக சிறையில் அடைக்கப்படாமல், இந்த காலத்தில் நிபந்தனைகளை மீறாமல் இருக்க வேண்டிய suspended sentence வழங்கப்பட்டுள்ளது.

102 நாட்கள் அனுமதியின்றி பணிக்கு வராததாக குற்றச்சாட்டு

Mino, 2023 மார்ச் முதல் 2024 டிசம்பர் வரை Seoul-ன் Mapo பகுதியில் உள்ள ஒரு வசதியில் social service agent ஆக பணியாற்றினார். அந்த காலத்தில் மொத்தம் 102 நாட்கள், தொடர்ச்சியாக அல்லாமல் பல்வேறு நாட்களில், உரிய காரணமின்றி பணிக்கு வரவில்லை என்று வழக்குத் தொடரப்பட்டது.

நீதிமன்றத்தின் கருத்து

ராணுவ சேவை என்பது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய கடமை என்றும், social service agent-களுக்கும் அதே பொறுப்பு பொருந்தும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. Mino குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டது மற்றும் வருத்தம் தெரிவித்தது உள்ளிட்ட அம்சங்களையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.

18 மாதங்கள் சிறை கேட்டிருந்த வழக்கறிஞர்கள்

இந்த வழக்கில் prosecution தரப்பு Mino-க்கு 1 ஆண்டு 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் இறுதியில் 1 ஆண்டு சிறைத்தண்டனையை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கியது.

மீண்டும் 102 நாட்கள் சேவை செய்ய வேண்டியிருக்கலாம்

இந்த தீர்ப்பு இன்னும் first-instance ruling என்பதால் இறுதி தீர்ப்பாகவில்லை. தீர்ப்பு இறுதியாக உறுதியானால், Mino அனுமதியின்றி பணிக்கு வராத 102 நாட்களுக்கு சமமான காலத்தை மீண்டும் social service ஆக நிறைவேற்ற வேண்டியிருக்கலாம் என்று South Korea Military Manpower Administration தெரிவித்துள்ளது.